இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்திய விமானப்படை, நமது நாட்டின் வான்வழி பாதுகாப்பை கட்டிக் காக்கும் ராணுவப் பிரிவாகும். இந்த படைப்பிரிவில் ‘‘கமிஷன்டு ஆபீசர்’ (மெட்டோராலஜி பிராஞ்ச்– ஜூலை2017) எனப்படும் அதிகாரி பணிகளுக்கு முதுகலை பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்–பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்...வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1–7–2017 தேதியில் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2–7–1991 மற்றும் 1–7–1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.கல்வித் தகுதி:
கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஓசனோகிராபி, மெட்டோராலஜி, அக்ரிகல்சரல், ஈகாலஜி, என்விரான்மென்ட், ஜியோபிசிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி போன்ற கலை அறிவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பின்போது கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.உடற்தகுதி:
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 சென்டிமீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு, பார்வைத்திறன், உடல்–உள நலம் போன்றவை விமானப் படைக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்படும்.தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டேஜ்–1 தேர்வில் நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். பிறகு ஸ்டேஜ்–2 தேர்வில் உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஒரு வருட பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை புகைப்படம் ஒட்டி நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து, புகைப்படங்கள், ரூ.27 ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும்.
அஞ்சல் முகப்பில் APPLICATION FOR METEOROLOGY BRANCH COURSES COMMENCING IN JULY 2017 என்று குறிப்பிட்டு POST BAG NO.001, NIRMAN BHAWAN POST OFFICE, NEW DELHI 110106 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சாதாரண தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 16–7–2016
மேலும் விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் ஜூன் 18–24 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கலாம்.








