நன்றி..... திரு . நந்தகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு.
இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியராக இருந்த நந்தகுமார் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ,
ஒவ்வொரு மாதமும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை வழங்கியது ,
கடுமையான வேலை வாங்கியதின் விளைவு, இன்று இராமநாதபுரம் மாவட்டம் மாநில
அளவில் இரண்டாமிடம்.
இவர் கொண்டுவந்த எலைட் கிளாஸ் முறை கடந்த ஆண்டு ஓரளவு பயன் கொடுத்தது இன்று 100 சதவீதம் பலன் கொடுத்திருக்கிறது.
காரணம்......
"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு "
"அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு"
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மேல் வைத்த நம்பிக்கை.
ஒரு மாவட்ட ஆட்சியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மேல் வைத்த நம்பிக்கையை , மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
வியாபார
நோக்கோடு இராசிபுரம் , சேலம் , திருச்செங்கோடு போன்ற இடங்களில் நடக்கும்
பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை இலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க
வைத்தவர்களின் எண்ணங்களில் இனியாவது மாற்றம் வந்தால் நல்லதுதான்.
அரசுப்பள்ளியில் தொடக்கம் முதல் படித்த மாணவர்கள்தான் +2 வரை அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள்.
தொடக்க
நிலையிலேயே அரசுப்பள்ளிகளை புறக்கணித்து +2 வரை பல இலட்சங்களை கொட்டி
வியாபாரிகளிடம் கொட்டிக் கொடுத்தவர்கள் , இனியாவது தொடக்கப்பள்ளிகளில்
தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் , அரசுப்பள்ளிகளில்
ஆசிரியர்பணி வாய்ப்பு அதிகமாகும்.
புறக்கணியுங்கள் வியாபாரிகளின் பள்ளிகளை.
வேலை வாய்ப்பைப் பெருக்க அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேருங்கள்.
மீண்டும் ஒருமுறை திரு. நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி... நன்றி.... நன்றி....!
இன்னும் பல நந்தகுமார்கள் வேண்டும்.
அரசுப்பள்ளிகள் வளர வேண்டும்.
இலவசக்கல்வி பெருக வேண்டும்.
வியாபாரிகளின் பள்ளிகள் ஒழிய வேண்டும்.