ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:
கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
போற்றுதலுக்குரிய பள்ளிக்கல்வி
முதன்மை செயலர் திரு. த.உதயசந்திரன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.நூறு
நாட்களில் பள்ளிக்கல்வித் துறையை தலைநிமிரச்செய்தீர்கள்.அரசாணை எண் 99
மற்றும் 100.ஆகியவற்றை செதுக்கிய விதம்.அதனை இந்த வீடியோவில் தாங்கள்
எடுத்துரைத்த விதம் அருமை.
அது தமிழக ஆசிரியர்களின் மனதிலும்
கல்வித்துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கும் என்பதில் மாற்றம்
இல்லை.பள்ளிக்கல்வித் துறையில் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் மாற்றங்கள்
நிச்சயம் தமிழ் சமுதாய மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை
வளர்க்கும்- மேலும் NTSE,NEET,IIT,JEE,IAS,IPS போன்ற போட்டி தேர்வுகளை
மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும் பயிற்சியும் பள்ளி அளவில்
வழங்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும்.
தமிழை
காக்கவேண்டிய பொறுப்பு தமிழகத்தில் ஒரு ஆங்கில ஆசிரியரின் கையில்
உள்ளது.ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பறையில்.ஆங்கிலத்தை முறையாக கற்பித்தால்
தமிழகத்தில் தமிழ் வாழும் என தாங்கள்
கூறியது ஆச்சரியமே ஆனால் உண்மை. கடைசி மனிதனின் பயனுள்ள கருத்துக்களையும்
உள்வாங்கி அவற்றையெல்லாம் தொகுத்து அதனை அடிப்படியாக கொண்டு
செயல்திட்டங்களை அமைக்கும் தங்களின் மேலான வழிகாட்டுத்தல்
போற்றுதலுக்குரியது. நீங்கள் கல்வித்துறையில் இன்று ஏற்றிய அகல் விளக்கு
நிச்சயம் ஒருநாள் என் சமுதாயம் ஒளி பெரும் மிகப்பெரிய மகாதீபமாக மாறும்
என்பதில் ஐயம் இல்லை.உங்களின் ஆணைக்காக காத்திருக்கும் தமிழக அரசுப் பள்ளி
ஆசிரியர்கள்.என்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனில் கல்விக்குரல்...