நேற்று பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர், அங்கு 2 சிறுத்தை குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் 2 சிறுத்தை குட்டிகளையும் ஆராய்ந்தனர்
அப்போது அதில் ஒன்று இறந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகளிடம் சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது