முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மே 19 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
மே 28 -ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
இன்றைய கலந்தாய்வு
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற உள்ளது. காலை 10, நண்பகல் 12, பிற்பகல் 2 என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது
பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மற்றும் மறு ஒதுக்கீடு பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது