அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்துடன், தென் மேற்கு பருவமழை
முடிவுக்கு வருகிறது. 8ம் தேதி, வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த
தாழ்வு பகுதியில் இருந்து, வட கிழக்கு பருவமழை துவங்கும்' என, இந்திய
வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.இந்தியாவின் முக்கிய மழை பருவமான,
தென் மேற்கு பருவமழை, ஜூன் முதல், செப்டம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு,
வழக்கத்தை விட, மூன்று நாட்கள் முன்கூட்டியே, மே, 29ல் பருவமழை துவங்கியது.
ஓமன் நாடுநாடு முழுவதும், குமரி முதல் காஷ்மீர் வரை, மழை கொட்டிய
நிலையில், வட மாநிலங்களில், ஒரு வாரத்திற்கு முன், பருவமழை முடிந்து
விட்டது.தென் மாநிலங்களில், 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இறுதி
கட்டமாக, அரபிக் கடலில், குமரிக்கு தென் மேற்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று உருவானது.
இது, இன்று இரவுக்கு பின், காற்றழுத்த தாழ்வு
மண்டலமாகவும், பின், புயலாகவும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்
படுகிறது.இந்த புயலுக்கு, ஓமன் நாடு தேர்வு செய்துள்ள, 'லுாபன்' என்ற பெயர்
வைக்கப்பட உள்ளது. மீனவர்கள் நேற்று முதல், அரபிக் கடல் பகுதிக்குள் நுழைய
தடை விதிக்கப் பட்டுள்ளது. லுாபன் புயல், வட மேற்கில் ஓமனை நோக்கி, 8ம்
தேதி நகரஉள்ளது. அது வரை, கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில
பகுதிகள், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மிக கனமழை
பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.நாளை இரவு முதல், 8ம் தேதி காலை வரை,
அளவுக்கு அதிகமான மழை கொட்டும் என, கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கேரளா
மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களுக்கு, 'ரெட் அலர்ட்'
கொடுக்கப்பட்டுள்ளது.வலுப்பெறும்லுாபன் புயல் நகர்ந்த பின், வங்கக் கடலின்
தென் மேற்கு பகுதியில், கேரளா மற்றும் இலங்கையின் அருகே, காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகி, அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என,
கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, வட கிழக்கு பருவமழை துவங்கும் என, இந்திய
வானிலை மையம் அறிவித்து உள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய
துணை இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறிய தாவது:வரும், 8ம் தேதி, வங்கக்
கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகம், கேரளா
மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கான
சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.வடகிழக்கு எப்படி
இருக்கும்?வழக்கமாக, அக்., 20க்கு பின், வடகிழக்கு பருவமழை துவங்கும்.
2017ல், அக்., 27ல் துவங்கியது. இந்த ஆண்டு, 20 நாட்கள் முன், பருவமழை
துவங்குகிறது. இந்த மழை, தமிழகம், கேரளா, புதுச்சேரி, தெற்கு கர்நாடகா,
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், இயல்பான அளவில், 89
முதல், 111 சதவீதம் வரை பெய்யும்.ஆனால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில்,
இயல்பான அளவில், 112 சதவீதத்துக்கு மேல் பெய்யும் என, இந்திய வானிலை மையம்
கணித்துள்ளது.இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயலுக்கு, ஆசிய
நாடுகள் சார்பில், பெயர் வைக்கப்படுகின்றன. இந்த வகையில், லுாபன் என்ற
பெயர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, மேற்காசிய நாடான ஓமன் நாட்டின் சார்பில்
தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் வைக்கப்பட்டுள்ள, லுாபன் என்ற
பெயருக்கு, நீண்ட கழுத்து உள்ள, பைன் மரம் என்று பொருள். இந்த முறை ஓமன்
பெயர் வைத்துள்ள, லுாபன் புயல், ஓமனையே தாக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வடகிழக்கு பருவமழை வரும், 8ல் துவக்கம் : 'லூபன்' புயலுடன் தென் மேற்கு பருவமழை முடிவு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |