தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, 'ரெட் அலர்ட்' என்ற சிவப்பு குறியீடு எச்சரிக்கையை, வானிலை மையம் விடுத்துள்ளது. இந்த தொடர் மழையின் முதல் நாளான, நேற்று முன்தினம், மாநிலம் முழுவதும் கனமழை கொட்டியது. நேற்று அதிகாலை வரை, பல இடங்களில் இடைவிடாமல் மழை கொட்டியது.
நான்கு நாட்களுக்கு, சென்னை வானிலை மையம் விடுத்த தொடர் எச்சரிக்கையின் படி, இன்று, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச்' நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், இன்று,
மிக கனமழை கொட்டும். சில இடங்களில், 12 செ.மீ., முதல், 20.5 செ.மீ., வரை
பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை தமிழகம் மற்றும் கேரளாவில், மிக அதிக கனமழை பெய்யும் என்பதற்கான, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உச்சபட்ச மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி, 20.5 செ.மீ.,க்கு மேல், மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழையான, 20.5 செ.மீ., வரை மழை பெய்யும்; திருச்சி மாவட்டத்தில், 12 செ.மீ., வரை கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை, இன்றும், நாளையும் வானம் மேக மூட்டத் துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சராசரி வெப்பநிலை, 28 டிகிரி செல்ஷியசாக குறையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நிலைமையை சமாளிக்க, அரசு, பல்வேறு துறைகளையும் முடுக்கிவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.