தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியிருந்தது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு
படையினரின் 5 குழுக்கள் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. முன் எச்சரிக்கை
நடவடிக்கைக்காக, அரக்கோணத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 2 குழுக்களும்,
மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 1 குழுவினரும் விரைந்துள்ளன. தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியிருந்தது.