
வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி
பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில்
உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும்
கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக
அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும்
பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.
சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை,
கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது
கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை
மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து
பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா
போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.