தீபாவளி விடுமுறை நிறைவு : இன்று அரசுப் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Hot

Post Top Ad

Wednesday, 7 November 2018

தீபாவளி விடுமுறை நிறைவு : இன்று அரசுப் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. சில பள்ளிகள் மட்டும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன
நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும், அனைத்து தரப்பினரும், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை, புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு கொளுத்தியும் மகிழ்ச்சியை பரிமாறினர்.
தீபாவளிக்காக, தமிழக அரசு சார்பில், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது, அரசு காலண்டர் அடிப்படையில், திங்கள்கிழமையன்று வேலை நாளாக இருந்தது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், கூடுதலாக ஒரு நாள் விடுப்பு கோரினர். அதனை ஏற்ற அரசு, தீபாவளிக்காக, திங்கள் கிழமையும் விடுமுறை விடுவதாக அறிவித்தது.


அதனால், சனிக்கிழமை முதல் நேற்று வரை, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. நான்கு நாள் தொடர் விடுப்பு நேற்று முடிந்த நிலையில், இன்று மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல இன்று இயங்கும். அரசு அலுவலகங்களிலும், இயல்பான பணிகள் இன்று துவங்க உள்ளன. சில பள்ளிகள் மட்டும், இன்றும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன. சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், இன்று விடுமுறையாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad