"ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை மெதுவாக மூடப்பட்டு வருகிறது" - ஐ.நா. தகவல் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 7 November 2018

"ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை மெதுவாக மூடப்பட்டு வருகிறது" - ஐ.நா. தகவல் :

ஓசோன் படத்தில் ஏற்பட்ட துளை மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு மாறும் என ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியை அடைந்தால் அதன் மூலம் உயிரினங்களுக்கு டி.என்.ஏ. குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து பூமியில் வாழும் உயிர்களைக் காக்கும் வகையில் ஓசோன் படலம் உள்ளது.
இந்த வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது. இந்த குளோரோ புளூரோ கார்பன் பிரிட்ஜ், ஏசி போன்ற மின் சாதனங்களில் இருந்து அதிகம் வெளிவருகின்றன. இந்த வாயு ஓசோன் பாதிப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது.
இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவிதுள்ளது.
மேலும், 2030ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் பாதுகாப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad