பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 7 November 2018

பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன் :

பட்டாசு வெடிக்காமல் செடிகள் நட்ட சிறுவன்

வெடிக்கு பதில் செடியை நட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குட்ட கிந்துாரை சேர்ந்தவர் லீலா வினோதன். லெதர் டெக்னாலஜி படித்த இவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் விகான் கிருஷ்ணா, 4, அங்குள்ள விவேகானந்தா பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வருகிறான். வழக்கமாக தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். நேற்று, பட்டாசு வெடிப்பதை தவிர்த்த சிறுவன், மாதுளை, எலுமிச்சை உள்பட ஐந்து செடிகளை, தன் நிலத்தில் நட்டு வைத்தான்.

சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: தற்போதுள்ள சூழலில் மரங்கள் அழிவதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே, பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், எங்கள் மகனுக்கு மரங்களை வளர்க்க அறிவுரை வழங்கினோம். இனி வரும் காலங்களில், தீபாவளி, பொங்கல் விழாவன்று, மரங்களை நட அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad