ஜாக்டோ- ஜியோ ஸ்டிரைக் அறிவிப்பு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Monday, 5 November 2018

ஜாக்டோ- ஜியோ ஸ்டிரைக் அறிவிப்பு

'மாநிலம் முழுவதும், 10 லட்சம் அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்,'' என, திருமங்கலத்தில், 'ஜாக்டோ- ஜியோ' எனப்படும், அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர், தாஸ் தெரிவித்தார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில் மதுரை, திருமங்கலத்தில் நேற்று நடந்தது. பின், தாஸ் கூறியதாவது:'பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்' என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை.
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள முரண்பாடுகள் களையப்படவில்லை. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதில், பள்ளிகளை மூட முயற்சி நடக்கிறது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்; பஸ்கள் இயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad