தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகியவற்றிற்கு சிறப்பாசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். பல்வேறு பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் பணி காலியாக
உள்ளதால், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நேரடி நியமனம் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு, நகராட்சி, மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள
உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகியவற்றிற்கு சிறப்பாசிரியர்
காலிப்பணியிடங்கள் விபரத்தை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம்
பட்டியல் தயாரித்து உடனடியாக பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.