தமிழக
அரசு சரியான வழிகாட்டுதல் வழங்காததால், சித்தா படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடக்குமா; பிளஸ் 2 மதிப்பெண்
அடிப்படையில் நடக்குமா என, தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறு கிறது.
சுற்றறிக்கை
அதேபோல, சித்தா, யோகா, ஆயுர்வேதம், ஓமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட

இந்திய மருத்துவ முறை படிப்புகளும், 2018 - 19 கல்வியாண்டு முதல்,
நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம்
அறிவித்தது.இதை, தமிழக அரசு ஏற்க மறுத்தது.
'இந்திய மருத்துவகவுன்சில் சட்டம், 1970ன் உள்ள விதிமுறைப்படி, சித்தா படிப்புகளுக்கு, 2018 - 19க்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தியது.
இந்நிலையில், '2019 - 20ம் கல்வியாண்டுக்கு, இந்திய மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்துக்கு, ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
இதனால், இந்தாண்டு, மாணவர் சேர்க்கை, எந்த அடிப்படையில் நடக்கும் என, மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
வழிகாட்டுதல்
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும்

Advertisement
ஓமியோபதி
இயக்குனரக அதிகாரிகள் கூறிய தாவது:ஆயுஷ் அமைச்சகத்தின் சுற்றறிக் கையை
சுட்டிக்காட்டி, இதற்கு வழிகாட்டுதல் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, கடிதம்
எழுதியுள்ளோம்.
தற்போது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், மே, 23க்கு பின், தமிழக அரசு வழிக்காட்டுதல் வழங்கும். அரசு எடுக்கும் முடிவின்படி, மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.
- நமது நிருபர் -