அக் ஷய திருதியைக்கு, இரு வாரங்களே உள்ளதால், அன்றைய தினம் தங்கம் வாங்க,
பெண்கள், தற்போதே, நகை கடைகளில், விரும்பிய நகைகளை தேர்ந்தெடுத்து,
முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவில், தங்கம் பயன்பாட்டில், தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில், தங்கம் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர, பல சலுகைகள் வழங்குகின்றன. இதனால், பிற மாநிலங்கள் மட்டுமின்றி, அண்டை நாடுகளில் இருந்தும், சென்னைக்கு வந்து, பலரும், தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை வாங்குகின்றனர். இதனால், தினசரி தங்கம் விற்பனை, 1,500 கிலோவுக்கு மேல் உள்ளது. தீபாவளி, அக் ஷய திருதியைக்கு, தங்கம் வாங்கினால், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, மக்களிடம் உள்ளது. இதனால், அன்றைய தினங்களில், வாடிக்கையாளர்களை கவர, தங்க விற்பனை நிறுவனங்கள், 'தங்கம் வாங்கினால், அதே எடைக்கு வெள்ளி இலவசம்; குறைந்த செய்கூலி; பரிசு பொருட்கள்' என, பல சலுகைகளை வழங்குகின்றன.மேலும், மொத்தமாக பணம் செலுத்தி, தங்கம் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக, மாதம் தோறும், 500 ரூபாய் முதல், நகை சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இதனால், வசதியானவர்கள் மட்டுமின்றி பலரும், அக் ஷய திருதியைக்கு, தங்க நகைகளை வாங்குகின்றனர்.இதையடுத்து, அன்று மட்டும், தங்கம் வழக்கமான விற்பனையை விட, 10 முதல், 20 மடங்கு அதிகரிக்கிறது. இதன்படி, அடுத்த மாதம், 7ம் தேதி, அக் ஷய திருதியை வருகிறது.
இதனால், பலரும், தங்களின் விருப்பமான கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, முன் பதிவு செய்து வருகின்றனர்.இதனால், சென்னையில், தி.நகர், அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, குரோம்பேட்டை, தாம்பரம் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களில் உள்ள நகை கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது.இதுகுறித்து, பெண்கள் கூறியதாவது:அக் ஷய திருதியைக்கு, கூட்டம் அதிகம் இருக்கும். அப்போது, விரும்பிய டிசைன் நகைகளை தேர்வு செய்வது சிரமம். தற்போது, பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.எனவே, குழந்தைகளையும் உடன் அழைத்து, தற்போது, நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்கிறோம். அதை, அக் ஷய திருதியை அன்று வாங்குகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:தமிழகத்தில், ஏப்., 18ல் லோக்சபா தேர்தல் நடந்தது. இதனால், வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சிகள், பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்கு வதை தடுக்க, தேர்தல் ஆணையம், தீவிர சோதனை நடத்தியது. இதனால், வியாபாரத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பணப் புழக்கமும் குறைந்தது. தற்போது, தேர்தல் முடிந்ததால், தங்கம் எடுத்து செல்வதில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், வரும், 6, 7ம் தேதிகளில், அக் ஷய திருதியைக்கு, தங்கம் விற்பனை நன்றாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -