கள பிரிவு பணிகளை மேற்கொள்ளும், 'கேங்மேன்' பதவிக்கான தேர்வுக்கு
விண்ணப்பிக்க, மே, 30 கடைசி நாள் என, மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பிரிவு பணிகளுக்கு,
கேங்மேன் என்ற புதிய பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம்
முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச், 7ல் வெளியிடப்பட்டது.
இதற்கு, மார்ச், 22 முதல் ஏப்., 24 வரை விண்ணப்பிக்கலாம் என,
தெரிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இதனால், விண்ணப்பிக்கும் வசதி துவங்கப்படவில்லை. இதுகுறித்து,
நமது நாளிதழிலும், நேற்று முன்தினம், விரிவாக செய்தி
வெளியானது.இந்நிலையில், தற்போது, நீதிமன்ற அனுமதி உடன், கேங்மேன் பதவிக்கு,
மின் வாரியம், விண்ணப்பங்களை பெறும் பணியை துவக்கிஉள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கேங்மேன் பதவிக்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு. வெளிப்படையாக, நேர்மையான முறையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்போது, அந்த பதவிக்கு, மின் வாரிய
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறும் பணி
துவங்கப்பட்டுள்ளது.வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள், தேர்வுக்கு, மே, 30ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த, ஜூன், 1 கடைசி நாள்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள், வாரியத்தின், www.tangedco.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர்
-இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கேங்மேன் பதவிக்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு. வெளிப்படையாக, நேர்மையான முறையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.