சென்னை, தமிழக தொல்லியல் துறையில், 30க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்
நிரப்பப்படாததால், அகழாய்வு உள்ளிட்ட முக்கிய பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன.தமிழக தொல்லியல் துறையில், தொல்லியல் அலுவலர்,
அகழாய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
காலியாக உள்ளன.
அவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., யால், நிரப்பப்படும். ஆனால், பல ஆண்டுகளாக, அதற்கான
தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தவில்லை.இதனால், கள ஆய்வு, அகழாய்வு,
கல்வெட்டு படியெடுத்தல் உள்ளிட்ட, முக்கிய பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.
அந்த பணிகளுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
இதனால், நுாலகம், அருங்காட்சியக பணிகள் பாதிக்கப்படுகின்றன.விரைவில்,
கீழடியில் அகழாய்வு நடக்க உள்ள நிலையில், தாமிர பரணி ஆற்றங்கரை,
ஆதிச்சநல்லுார், உடையாளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள, தொல்லியல் சான்றுகளை
ஆய்வு செய்யும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பணியாளர் பற்றாக்குறையால், அகழாய்வுப்
பணிகள், கள ஆய்வுப்பணிகள், அலுவலக பணிகளை நடத்த முடியாத நிலைக்கு தொல்லியல்
துறை தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொல்லி யல் துறை அலுவலர்கள் கூறியதாவது:தமிழக தொல்லியல் துறையில், கல்வெட்டு, தொல்லியல், வேதியி யல், பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும், புகைப்பட கலைஞர், ஸ்தபதி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட அலுவலக பணியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு, முன்வர வேண்டும் அல்லது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும். அப்போது தான், தமிழகத்தின் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.