கோடை காலம் தொடங்கிய உடன் சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள்
பெரும் அவதி பட்டு வந்தனர்.
இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில்
லேசான அல்லது கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்
நேற்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்
பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக
மார்த்தாண்டம், தக்கலை, அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன்
பலத்த மழை பெய்து வருகிறது. மழை காலத்தில் கூட பெய்யாத மழை கோடைகாலத்தில்
இடிமின்னலுடன் பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
அதே போன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் இன்று
மிதமானதாக உள்ளது. குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவாக
வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை பொறுத்தவரை வானம் சில நேரம் மேகமூட்டத்துடனும் சில நேரம் வெயிலும்
காணப்படுகிறது. ஆனால் சென்ற வாரம் இருந்தது போல சுட்டெரிக்கும் வெயிலின்
தன்மையிலிருந்து சற்று குறைவான வெயிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது