மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது டெரெக் லால்ஷான்ஹிமா என்ற சிறுவனின்
மனித நேயமிக்க ஒரு செயல் நாடு முழுவதும் தலைப்பு செய்திகளில்
இடம்பெற்றுள்ளது
தனது கவனக்குறைவால் காயம் அடைந்த கோழிக்குஞ்சு ஒன்றை மருத்துவமனைக்கு
தூக்கி கொண்டு இந்த சிறுவன் ஓடியுள்ளான்.
அதுமட்டுமின்றி தான் சேமிப்பாக வைத்திருந்த பத்து ரூபாயை மருத்துவரிடம்
கொடுத்து அந்த கோழிக்குஞ்சை காப்பாற்றுங்கள் என கூறியுள்ளது அனைவரையும்
நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சிறுவனின் இந்த செயல் தற்போது நாடு
முழுவதிலும் இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளதுஇந்த சிறுவனின் இந்த செயலால்
நாடு முழுவதும் ஒரே நாளில் ஹீரோவான டெரெக் லால்ஷான்ஹிமா அவன் படித்து வரும்
பள்ளியும் மரியாதை செலுத்தியுள்ளது.
அந்த சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் சான்றிதழ் கொடுத்து
கெளரவப்படுத்தியுள்ளது. சான்றிதழை கையில் வைத்து கொண்டு அந்த சிறுவன்
புன்னகையும் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
கோழிக்குஞ்சு அடிபட்டதும் தன்னுடைய பெற்றோர்களிடம் அந்த கோழிக்குஞ்சை
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் உடனே தானே அந்த
கோழிக்குஞ்சை சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்து சென்றதை கேள்விப்பட்டு
மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மருத்துவமனையின் ஊழியர்
ஒருவர்தான் சிறுவனின் இந்த செயலையும் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக்கில்
பதிவு செய்து இதனை உலகிற்கு தெரிவித்துள்ளார்.