
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கான அரசாணை இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் வெளிவரும் எனத் தெரிகிறது.
விரைவில் வரவுள்ள தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை, ஒன்றிரண்டு வாரங்களில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், 5% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.