தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Tuesday, 31 March 2020

தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம் :

தள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்
கோப்புப்படம்
புதுடெல்லி:

கொரோனா பிரச்சனை காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்பு இல்லை.


எனவே ஊரடங்கு முடிந்ததும் தேர்வு நடத்துவது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம்.

14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும்.

அதன்பிறகு தேர்வு நடத்தப்படும் விடைத்தாள்களையும் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்த தேர்வுகளுக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 7 தேர்வுகளுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தேர்வு தேதியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு முடிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த தேர்வுகளும் மே மாதம் வாக்கில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் எல்லா பணிகளும் முடிந்துவிடும் என்று அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.