ஏப்ரல் -1-முட்டாள்கள் தினம் அல்ல ..உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்த தினம்
அறிவோம் அறிவரை..!
------------------------------------
கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்,
பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணங்களின்
நிதிப் பரிணாமம்.
ரூபாயின் சிக்கல்கள்-மூலமும்,தேர்வும்
உள்ளிட்ட
மிகச்சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்ட பொருளாதார மாமேதை அண்ணல் அம்பேத்கர்
,இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றத்திற்கு அடிகோலிய நாள்.
1934
ல், பிரிட்டிஷ் இந்தியாவில் நிதி நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப் பட்ட
கில்டன் யங் ஆணையம் அறிவர் அம்பேத்கரை சந்தித்து அவரின் பரிந்துரைகளைப்
பெற்றுக்கொண்டது.
'ரூபாயின்
சிக்கல்கள்-மூலமும் தீர்வுகளும் ' எனும் நூலில் அம்பேத்கர் தந்த ஆய்வு
முடிவுகளை கவனமாகப் பரிசீலித்த ஆணையம் ஒரு மத்திய வங்கிக்கான தேவையை நன்கு
உணர்ந்தது.
விளைவாக...
1935 ஏப்ரல் 1 ல்
இந்திய ரிசர்வ் வங்கி உருவெடுத்தது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
அறிவார்ந்த பார்வை மூலமாக.
நிதிக் கொள்கைகள் உருவாக்கம், அரசியலமைப்புச் சட்டம்,
சட்ட ஆணைய உருவாக்கம்,
மனித உரிமை அடிப்படைகள், தொழிலாளர் உரிமைகள்,
நதி நீர் மேலாண்மை என எல்லா வகைகளிலும் இந்த தேசம் உருவானது.
புரட்சியாளரின்
இளமைக்கால வாழ்க்கை,மேலை நாடுகளில் அறிவுக்கான அவரது
தேடல்கள்,ஆய்வுகள்,களப் போராட்டங்கள்,தேச உருவாக்கத்திற்கான
பணிகள்,எழுத்தும் பேச்சுமாக ஆயிரக்கணக்கான பக்கங்களின் விரியும் அவரது
சிந்தனைகள்,மகாத்மாக்களை எதிர்த்த கம்பீரம்..
என புரட்சியாளரின் வாழ்க்கையை முழுவதுமாகத் தொகுத்துப் பார்க்கும் ஒருவருக்கு அவரது பணிகள் மிகுந்த வியப்பை ஏற்படுத்துவன.
இந்திய நிதி நிர்வாகத்தின் தந்தை அறிவர் அம்பேத்கரை நன்றியுடன் நினைவு கூர்வோம்! மனசாட்சியுள்ள யாவரும் வாழ்த்துவோம்.!
*ஏப்ரல் 1 முட்டாள்களின் தினம் அல்ல
புரட்சியாளர் அம்பேத்கரை அறிவுலகம் வியந்து பார்த்த நாள்*.