சென்னை : 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு
செய்வது தொடர்பாக, 'ஆன்லைனில்' வழிகாட்டுதல் வழங்கப்படும்' என, சென்னை
ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய அளவில், பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் வழங்க, சென்னை ஐ.ஐ.டி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 400 புதிய படிப்புகளை ஆன்லைனில் நடத்த உள்ளது.இதில், சேர்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. http://onlinecourses.nptel.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்கலாம்.அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்,இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது குறித்து, அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஆன்லைனில் நடத்தப்படும்.
இதில், சென்னை ஐ.ஐ.டி.,யின் மூத்த
பேராசிரியர்கள் பங்கேற்று, குறிப்புகள் வழங்குவர். இதற்கும், சென்னை,
ஐ.ஐ.டி.யின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேசிய அளவில், பல்வேறு படிப்புகளை ஆன்லைனில் வழங்க, சென்னை ஐ.ஐ.டி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 400 புதிய படிப்புகளை ஆன்லைனில் நடத்த உள்ளது.இதில், சேர்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. http://onlinecourses.nptel.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்கலாம்.அதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்,இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வது குறித்து, அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஆன்லைனில் நடத்தப்படும்.