இதனால், ராஜஸ்தானில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல், பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல், ஜூலை இறுதி வரை நீடிக்கும். இது, 17 மாநிலங்களுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக விவசாயிகள் மத்தியில், இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், தமிழகம் வர வாய்ப்பில்லை என, மத்திய அரசு
கூறியுள்ளது.
அதே நேரத்தில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், உள்ளூர் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இது, விவசாயிகளுக்கு அச்சத்தையும், வேளாண் துறைக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
இதற்கு, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதனால், வேளாண் துறைக்கு புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்ளூர் வெட்டுக்கிளிகள், விவசாய நிலங்களில் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்துவது கிடையாது.
அங்கு வரும் பறவைகள், எலிகள் உள்ளிட்டவை, இந்த வெட்டுக்கிளிகளை விரும்பி சாப்பிடுகின்றன. இதனால், பயிர்கள் காக்கப்படுகின்றன. எனவே, இந்த வெட்டுக்கிளிகள், விவசாயிகளின் நண்பனாக உள்ளன.








