பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகள்: தமிழக பள்ளிக் கல்வித் துறை விதிகளின் படி, பிளஸ் 1 தேர்வில், சில பாடங்களை எழுதாவிட்டாலும், தேர்வு எழுதிய சில பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 படிக்கலாம் மற்ற மாணவர்களை போல, அவர்கள் பிளஸ் 2வில், தினமும் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்கலாம். அனைத்து வகை கற்றல் பணிகளில் பங்கேற்கவும், அரசின் சலுகைகளை பெறவும், அவர்களுக்கு அனுமதி உள்ளது. அதேநேரம், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, துணை தேர்வு வழியாகவோ அல்லது அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு வழியாகவோ, தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இதை, பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.








