
தங்கம் விலை, இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி சவரனுக்கு 200.ரூபாய் உயர்ந்து ரூ.38,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4764-ரூபாயாக இருந்த நிலையில்,ஒரு கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.4789 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய மாலை நிலவரப்படி வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று 60,400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை ரூ 2,400 உயர்ந்து 62,800க்கு விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.