
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு, பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், பழங்குடி பிரிவைச் சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோரில், பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்தும், பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், விதவைகள் மற்றும் கணவரால்கைவிடப்பட்டோர் 20 வயதுபூர்த்தியடைந்து, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த பெண்கள், பழங்குடி பிரிவைச் சேர்ந்த எழுதப் படிக்க தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடமுள்ள பள்ளி, பள்ளிகளுக்கான இனசுழற்சி விவரம், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக்.3-ம் தேதிக்குள் தொடர்புடைய ஊராட்சிஒன்றிய, மாநகராட்சி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி ஆணையர்களை தொடர்பு கொள்ளவும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.