கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் வியர்வை பிரச்சினை தலைதூக்கும். ஈரப்பதம் சார்ந்த பிரச்சினையும் உருவாகும். அவற்றை ஈடு செய்வதற்கு திரவ உணவுகளை உட்கொள்வது பாதுகாப்பானது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மழைக்காலத்தில் கிடைக்கும் பழங்களையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை மழைக்காலங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. எனவே அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். நட்ஸ் வகைகள், தானியங்கள், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. அவை பருவமழைக்கால நோய்களைத் தடுக்க உதவும்.