கோவை;தியாகி என்.ஜி.,ஆர்., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டதை ஆதரித்தும், எதிர்த்தும், இரு வேறு தரப்பினர் நேற்று கோவை சி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தியாகி என்.ஜி.ஆர்., மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லுாரில் செயல்படுகிறது. இதன் தலைமையாசிரியர் சதாசிவம் நில அபகரிப்பு செய்ததாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கு விளக்கம் கோரி, தலைமையாசிரியருக்கு கல்வித்துறை சார்பில், 6ம் தேதி, விளக்க நோட்டீஸ் தரப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமையாசிரியருக்கு ஆதரவாக பெற்றோர் சிலர் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சி.இ.ஓ., உஷா, பெற்றோரிடம் பேசிய பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில், பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் சிலர், சி.இ.ஓ., அலுவலகம் வந்தனர்.சி.இ.ஓ., உஷா கூறுகையில், ''தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி நிர்வாகிகளுக்கும், தலைமையாசிரியருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, 2014 முதல், கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதை விசாரிக்க, பேரூர் மற்றும் சிட்டி டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.''பள்ளி தலைமையாசிரியர் மீது, போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், துறை ரீதியான விளக்கம் அளிக்க நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து இன்னொரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Tuesday, 12 January 2021
தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்: சி.இ.ஓ., அலுவலகத்தில் இரு தரப்பினர் புகார் :
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...