ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அவதார விழாவாக தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டும் மார்ச் 4-ம் தேதி வைகுண்டரின் பிறந்தநாள் விமர்சிகையாக நடைபெற உள்ளது.. எனவே அன்றைய தினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்..
எனவே இந்த ஆண்டும் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் வைகுண்டரின்
பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட
ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள். அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. எனினும் அன்றைய நாளில் முக்கிய தேர்வுகள்
இருப்பின, தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது..