தூத்துக்குடி
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் திருப்பூர்
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில்
(Aavin) காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
முன்னதாக வெளியான நிலையில் தற்போது அதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கால
அவகாசம் நிறைவடைய உள்ளது.
இந்த வேலைக்கான விவரங்களை படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் கல்வித் தகுதி
மற்றும் ஆர்வம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | ஆவின் (திருப்பூர் மாவட்டம் ) |
பணியின் பெயர் | தமிழ்நாடு கால்நடை ஆலோசகர் |
காலிப்பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30/08/2022 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை | -. |
கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BVSc & AH படித்திருக்க வேண்டும். |
சம்பள விவரம் | மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. |
நேர்காணல் நடைபெறும் இடம் | திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு , திருப்பூர் - 641 605. நேர்காணல் நடைபெறும் தேதி : 30/08/2022 |
https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/08/2022080545.pdf
ஆட்சேர்ப்பு அறிவிப்பு
இந்த இணைப்பில் அறிவிப்பு உள்ளது.
இதே போன்று தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்தொழிற்சங்கத்தில் (ஆவின்) பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021 - 22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | ஆவின் |
பதவிகளின் பெயர் | கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 4 காலியிடங்கள் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 30.08.2022 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | விண்ணப்பிக்கத் தேவை இல்லை. நேரடியாக வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். |
அதிகாரப்பூர்வ தளம் | https://thoothukudi.nic.in/ta/ |
கட்டணம் | கட்டணம் கிடையாது. |
இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இந்த நேர்முக தேர்வு 74F, பாலவிநாயகர் கோவில் தெரு, 2வது தளம், தூத்தக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது.