நீங்கள் ஏற்கனவே அஞ்சலக சேமிப்பு கணக்கை வைத்திருப்பவரக இருந்து புதியதாக பிபிஎஃப் கணக்கு தொடங்க விரும்பினாலும் சரி அல்லது ஏற்கெனவே இருக்கும் பிபிஎஃப் கணக்கை மூட நினைத்தாலும் சரி இனிமேல் எல்லாமே ஆன்லைனிலே செய்துக் கொள்ளலாம்.
புதியதாக PPF கணக்கைத் திறக்க அல்லது உங்கள் முதிர்ச்சியடைந்த PPF கணக்கை மூட இனி நீங்கள் தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகளை வழங்குவதற்கு ஏற்ப அறிமுகப்படுத்திய இன்டர்நெட் பேங்கிங்கில் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம் மற்றும் மூடலாம். இந்த கணக்கைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் போஸ்ட் ஆபீஸ் நெட்பேங்கிங் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
போஸ்ட் ஆபீஸ் இன்டர்நெட் பேங்கிங் யூசரின் பெயரில் புதிய PPF கணக்கு திறக்கப்படும் என்பதையும், ஏற்கெனவே ஓபன் செய்த
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பதிவு செய்யப்பட்டவர் போலவே நாமினியும் இருப்பார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதிர்ச்சியடைந்த பிபிஎஃப் கணக்குகளை மட்டுமே ஆன்லைனில் மூட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போஸ்ட் ஆபீஸ் நெட்பேங்கிங் மூலம் PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?
1. நெட்பேங்கிங் உள்நுழைக
2. 'General Services' என்பதைக் கிளிக் செய்யவும்
3. பின்னர் 'Service Requests' என்பதற்குச் செல்லவும்.
4. 'New Requests' என்பதைக் கிளிக் செய்யவும்
5. PPF கணக்குகளுக்குச் செல்லவும்
6. 'PPF கணக்கைத் திற' என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது, நீங்கள் கணக்கைத் திறக்க விரும்பும் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். (குறைந்தபட்சத் தொகை ரூ. 500.அல்லது அதற்கு மேல் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்). பின்பு உங்கள் தொகையை டெபிட் செய்ய விரும்பும் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸ் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து அவற்றை ஏற்க 'Click Here' என்பதைக் கிளிக் செய்யவும்
பின்பு, ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்,பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிடவும் இறுதியாக சமர்ப்பிக்கவும். இதற்கான டெபாசிட் ரசீதை பார்க்க/பதிவிறக்க அதே போல் பிபிஎஃப் கணக்கின் விவரங்களைச் சரிபார்க்க, மீண்டும் உள்நுழைந்து, 'Accounts' என்ற தலைப்பின் கீழ் பிபிஎஃப் கணக்கைச் சரிபார்க்கவும்.
போஸ்ட் ஆபீஸ் நெட்பேங்கிங் மூலம் பிபிஎஃப் கணக்கை ஆன்லைனில் மூடுவது எப்படி?
இதில் முதிர்ச்சியடைந்த கணக்குகளை மட்டுமே மூட முடியும். குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படுகிறது, எனவே, தொடர்புடைய கணக்கை மூடுவதற்கான படிவம், உங்கள் பாஸ்புக் மற்றும் பிற ஆவணங்களை நீங்கள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் முதிர்ந்த PPF கணக்கை ஆன்லைனில் மூடும் வழிககள்:
1. நெட்பேங்கிங் உள்நுழைக
2. 'General Services' என்பதைக் கிளிக் செய்யவும்
3. பின்னர் 'Service Requests' என்பதற்குச் செல்லவும்.
4. 'New Requests' என்பதைக் கிளிக் செய்யவும்
5. PPF கணக்குகளுக்குச் செல்லவும்
6. 'PPF கணக்கை மூடு' என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது, டெபாசிட் கணக்கு அதாவது . இதில் (நீங்கள் மூடப்பட வேண்டிய PPF கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்)
கிரெடிட் அக்கவுண்ட் மீது கிளிக் செய்யவும். இறுதியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.
பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிட்டு அதை சமர்பிக்கவும். இப்போது இதற்கான ரசீதை பார்க்க/பதிவிறக்க, PPF கணக்கை வெற்றிகரமாக மூடிவிட்டீர்களா என்பதைச் சரிபார்க்க, வெளியேறி, மீண்டும் உள்நுழையவும். சேமிப்பு தொகை வெற்றிகரமாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை மூடல் ரசீதை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.