பிளஸ் 1 மாணவர்களுக்கு, அக்., 1ல் நடக்க இருந்த திறனறித் தேர்வு, அக்., 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், திறனறித் தேர்வு நடத்தப்படும்.
அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளி மாணவர்களும், தேர்வில் பங்கேற்கலாம். தேர்வில் வெற்றி பெறும், 1,500 மாணவ - மாணவியருக்கு மாதம் 1,500 ரூபாய், இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.அதன்படி திறனறித் தேர்வு, அக்., 1ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, இந்தத் தேர்வு அக்., 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.