மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.