நிறுவனம் | கிழக்கு மத்திய ரயில்வே - Eastern Railway |
பணி விவரம் | பழகுநர்களுக்கு பயிற்சி |
யார் விண்ணப்பிக்கலாம்? | எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். |
அறிவிக்கை | Notice No.RRC-ER/Act Apprentices/2022-23 |
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை | 3115 |
வயதுக்கான தகுதி | விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம் |
தேர்வு செய்யப்படும் முறை | 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. |
கல்வித்தகுதி | 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் விதிவிலக்காக, Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. |
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி | 29/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | www.rrcer.com - kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்பக் கட்டணம் | விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது |
ஊதியம் | தொழில் பழகுநர் சட்டத்தின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும். |
மேலும், விவரங்களுக்கு | https://rrcer.com/ |
கூடுதல் தகவல்: தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு மட்டுமே கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், நிரந்தர வேலைவாய்ப்பு கோர முடியாது. பயிற்சி காலத்திற்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் வெளியேற்றப் படலாம்.
ஏன் முக்கியம் பெறுகிறது:
இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level - 1 recruitment notification முந்தைய Gr. 'D' category posts (Grade Pay - Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது.
எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
NOTIFICATION FOR ENGAGEMENT OF ACT APPRENTICES FOR TRAINING SLOTS IN EASTERN RAILWAY UNITS