மேற்படி அரசாணையில் , பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் , தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19 - இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து , ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , 80 பட்டதாரி ஆசிரியர்கள் , 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும் ) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 7500 / - , பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .10,000 / - மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .12,000 / - மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.
பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.