குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத்
தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம்
பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535)
தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7
மாதங்கள் கடந்த நிலையில், இதுநாள் வரை தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்படவில்லை.
குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதவாது தொடர்பாக கடந்த மாதம் 14ம் தேதி டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்தது.
முந்தைய ஆண்டுகளை விட, 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றதாக தெரிவித்தது. மேலும், இம்முறை விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 36 லட்சத்திறகும் கூடுதலாக வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதாகவும், தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனேயாக வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் நேற்று முழுவதும் ட்ரெண்டாகியது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டன.
இந்நிலையில், குரூப் IV பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் வெளியிடுதல் குறித்த தெளிவுரையை பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. அதில், தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. எனவே, இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக கூறியுள்ளது.