நவக்கிரகங்களில் சனிக்கிரகம் நிழல் கிரகம். சூரியனை விட்டு மிக தள்ளி இருப்பதால் அதன் ஒளி சனி மேல் படுவதே இல்லை.
இதனால் தான் ஜோதிட ரீதியாக சனி வந்து விட்டால் மெல்லத் தான் நகருவார். அந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் சனியை கொடுப்பாரும் இல்லை என்பது ஜோதிட வாக்கு.மற்ற கிரகங்கள் ஒவ்வொரு ராசியாக மாறிக் கொண்டே இருக்கும் போது ஏற்படுவதை காட்டிலும் சனிப்பெயர்ச்சி காலங்களில் வாழ்வில் தாக்கம் அதிகமாக இருக்கும். சனிபகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானார். இப்போது, சனி தனது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் மீது திரும்புகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் தனது ஏழாம் பார்வையை விருச்சிக ராசியில் வைத்திருப்பதால் ம் மாளவ்ய ராஜயோகம் உருவாக போகிறது.
விருச்சிக ராசி செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு சனியின் 10ம் பார்வையால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன. லாபங்கள் அதிகரிக்கும். சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு சனியின் 10ம் பார்வை சாதகமாக இருக்கும். ஏப்ரல் 6ம் தேதி இவர் சுக்கிரன் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கொடுக்கல், வாங்கல் அமோகமாக இருக்கும். நவபஞ்சம ராஜயோகத்தால் பெரியஒப்பந்தம் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறுவீர்கள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே, சனியின் 10ம் பார்வை நன்மையை கொண்டு வந்து சேர்க்க போகிறது. கலை, இசை, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள், தொடர்பு உடையவர்கள் அமோகமாக இருக்கப் போகிறீர்கள். பேரும், புகழும் வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். உடல் ஆரோக்கியம் சீரடையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உருவாகும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே சனியின் 10ம் பார்வையால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். சனி தனது சொந்த வீடான கும்பத்தில் திரிகோண ராஜயோகத்தை தர உள்ளார். மறுபுறம், சுக்கிரனின் பெயர்ச்சியால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. சனி மற்றும் சுக்கிரனின் பார்வையால் தொழில் மேன்மை அடைய போகிறது. கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள், பதவி உயர்வு நிச்சயம். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.