ஆனால் நாம் இன்றைய காலத்தில் முப்பது, நாற்பது வயதுகளிலியே மாரடைப்பு, சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவதுடன் நம் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றோம்.
இயற்கையானது நமக்கு வாரி தந்த கொடைகளை நாம் வீண் செய்கிறோம். இதனால் நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. ஆனால் நம் பழைய சந்ததியினர் இயற்கையின் மகிமையை உணர்ந்து செயற்பட்டார்கள்.