காலையில்
நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும்,
மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கு காபி தேவைப்படுகிறது.
காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அதிக பிரியத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது, நமது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.