ஆசிரியர் தகுதித்தேர்விற்கு ஏற்ப பி.எட். படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம் :
ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக
எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் அளித்த பேட்டி:
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான
சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில், பி.எட். படிக்கும் மாணவர்கள் படிப்பை
முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், இந்த படிப்பில்
புதிய பாடப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, "கல்வியில் புதுமை
மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டுமுதல்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செய்முறைத் தேர்வு மதிப்பெண்
கணக்கிடும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 150, 105
மற்றும் 100 மதிப்பெண்கள் என மூன்று பகுதிகளாக இருந்த செய்முறைத் தேர்வு
இப்போது 200, 200 மதிப்பெண்கள் என இரண்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
கல்லூரி வேலை நாள்கள் அதிகரிப்பு: மேலும் பி.எட். கல்லூரிகளின் வேலை
நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை
180 வேலை நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200 வேலை நாள்களாக
அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...