கணினிகள் காமன் சென்ஸ் பெறுவதற்கான புதிய புரோகிராம்!
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானிகள் அடங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, காமன் சென்ஸ் எனப்படும் பொது விழிப்புணர்வு அறிவை, கணிப்பொறிகள் பெறும் வகையிலான ஒரு புதிய புரோகிராமை வடிவமைத்துள்ளது. இதன்மூலம், தேவையான அறிவைப்பெற, இணையதளம் மற்றும் லேபிள் படங்களில், கணிப்பொறி தானாகவே தேடலை மேற்கொள்ளும்.
Never Ending Image Learner(NEIL) என்று அழைக்கப்படும் அந்த புரோகிராம்,
கார்னேஜ் மெல்லன் பல்கலையில், ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் இயங்கிக்
கொண்டுள்ளது. படங்களுக்காக வலைதளத்தில் தேடுதல், அதை சொந்தமாக
புரிந்துகொள்ள முயற்சி செய்தல் மற்றும் பெரியளவில் காமன் சென்ஸ் திரட்டும்
நடவடிக்கை உள்ளிட்டவை இந்த செயல்பாட்டில் அடக்கம்.
இதன்மூலம், வண்ணங்கள், வெளிச்சம் மற்றும் உபகரணங்கள் ஆகிய பண்புகளை,
குறைந்தளவு மனித மேற்பார்வையில் அடையாளம் காணுதல் போன்ற சாத்தியங்கள்
கணிப்பொறி துறையில் உருவாகும்.
மேலும், இதனால் உருவாக்கப்படும் தரவு, கணிப்பொறிகளின் திறனை அதிகரித்து,
காட்சி உலகத்தை புரிந்துகொள்ளும் நிலைக்கு கொண்டுவரும். காட்சி அம்சங்களை
புரிந்துகொள்ள படங்களே சிறந்த வழி. உலகைப் பற்றிய பொது அறிவு தகவல்களை
படங்கள் உள்ளடக்கியுள்ளன.
கணிப்பொறிக்கு எப்படி மற்றும் என்ன கற்றுக்கொடுப்பது என்பது பற்றி,
மனிதர்களுக்கு எப்போதும் தெரிந்திருப்பதில்லை. ஆனால், அவை தவறு
செய்யும்போது கண்டுபிடிப்பதில் மனிதர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்
என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...