- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 29 November 2013

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி:

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக மாநகர பஸ், மின்சார ரெயில், கால் டாக்சி போன்றவற்றில் பயணம் செய்ய முடியும். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மெட்ரோ ரெயில் பணி சென்னையில், ரூ.14 ஆயிரம் 600 கோடி மதிப்பில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்டிரல் - பரங்கிமலை இடையே 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க மற்றும் பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், சுரங்கப் பாதை, பறக்கும் பாதை, ரெயில் நிலையங்கள் பணி என மொத்தப் பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மத்தியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. மின் கம்பி இணைக்கும் பணிதற்போது அந்த வழித்தடத்தில், பறக்கும் பாதை அமைக்கும் பணி முடிந்து, அதில் தண்டவாளம் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கோயம்பேடு - அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடையே மின் கம்பி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல் மெட்ரோ ரெயில் பிரேசில் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 2 மெட்ரோ ரெயில்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ரெயில்களும் விரைவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட உள்ளன. ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு இந்த நிலையில், மெட்ரோ ரெயில் அதிகாரிகள், ரெயில் போக்குவரத்து தொடங்கும்போது என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முக்கியம் வாய்ந்த ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. அதாவது, ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம், மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில், கால் டாக்சி ஆகியவற்றில் பயணம் செய்யும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆலோசனை கூட்டம்ஏற்கனவே, சென்னையில் ஸ்மார்ட் கார்டு மூலம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் வசதி உள்ளது. ஆனால், இதற்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதனால், பயணிகள் கவனத்தை ஈர்க்கும்வகையில், ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வசதியை நிப்பான் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட வீடியோ படம் இந்த ஆலோசனை கூட்டத்தில் காட்டப்பட்டது. தானியங்கி முறையில் எப்படி கட்டணம் வசூலிப்பது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மெட்ரோ ரெயில் நிறுவனம், போக்குவரத்து துறை, மாநகர போக்குவரத்து துறை, தெற்கு ரெயில்வே அதிகாரிகள், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள், கால் டாக்சி நிர்வாகத்தினர், தனியார் முன்பதிவு நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H