அரியலூரில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஊர் வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூர் காமராஜர் திடலில் இருந்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரிய கழக மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலையை அடைந்தனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரிய தகுதி தேர்வை நீக்க வேண்டும். தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும். மத்திய அரசு வழங்கி உள்ளது போல் அனைத்து படிகளையும் மாநில அரசு வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய்மொழியாக தமிழ்வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.








