ஊர்வலம்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜேக்டோ அமைப்பின் சார் பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செய லாளர் செல்வராஜ் தலைமை தாங்கினர். ஊர்வலத்தை பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் இருந்து ஜேக்டோ உயர்மட்டக் குழு உறுப்பனர் சுப்ரமணியன், ஜேக்டோ பொதுக்குழு உறுப் பினர் எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மத்திய அரசு வழங்கியுள்ள தர ஊதியத்துடன் கூடிய ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசின் 14 வகை நலத்திட்ட பணிகளை வழங்குவதற்காக நலத்திட்ட அதிகாரியை நிய மிக்க வேண்டும். அரசாணை யில் திருத்தம் செய்து தமிழ்ப்பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராஜேந் திரன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெயராமன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் மணி வண்ணன், பதவி உயர்வுபெற்ற பட்டதாரி தமிழ் ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் அய்யம்பெருமாள், தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தேசிங்குராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செய லாளர் அருள்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜேக்டோ நிதி காப்பாளர் பழனிவேலன் நன்றி கூறினார்.








