கவன ஈர்ப்பு ஊர்வலம்
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கிய இந்த ஊர் வலத்தை தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநில பொருளாளர் கணேசன் ஆகியோர் பேசினர்.ஊர்வலத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் பதிவு மூப்பு அடிப் படையில் உடற்கல்வி ஆசிரி யர் மற்றும் உடற்கல்வி இயக்கு னர்கள் நியமிக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமித் திட வேண்டும். மாணவர் களின் எண்ணிக்கை அடிப் படையாக கொண்டு தொடக் கப்பள்ளிகளை மூடும் நோக் கத்தை கைவிட்டு அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய் மொழியாக தமிழ் வழிக்கல்வியை நடைமுறை படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தை வந்தடைந்தது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நட வடிக்கை குழுவை சேர்ந்த வர்கள் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன் நன்றி கூறினார்.








