வரும் 2015-16 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு
தாக்கல் செய்கிறார். பல்வேறு மானியங்களை குறைப்பது, நேரடியாக பயனாளிகளுக்கு
வங்கியில் அளிக்கும் நிதி சலுகைகள் ஆகியவை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
* வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 அல்லது ரூ.3.5 லட்சமாக உயர்த்தலாம்.
* வருமான வரி சதவீதத்திலும் மாற்றம் வரலாம். இப்போது ரூ.2.5 ரூ.5 லட்சத்துக்கு 10 சதவீதம்; ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் என்று இருக்கிறது.
* பிரிவு 80சி யில் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமாக உள்ளது. இந்த வரம்பு உயரலாம்.* வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 அல்லது ரூ.3.5 லட்சமாக உயர்த்தலாம்.
* வருமான வரி சதவீதத்திலும் மாற்றம் வரலாம். இப்போது ரூ.2.5 ரூ.5 லட்சத்துக்கு 10 சதவீதம்; ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் என்று இருக்கிறது.
* 1.5 லட்சம் வரை வீட்டுக்கடன் அசலில் விலக்கு உண்டு. இது இப்போது 3 லட்சமாக அதிகரிக்கலாம்.
* வீட்டுக்கடன் வட்டியிலும் சலுகை இருக்கும். குடியிருக்கும் வீட்டுக்கு வட்டியில் விலக்கு வரம்பு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு அலவன்ஸ்கள் பல ஆண்டாக உயரவில்லை; போக்குவரத்து படி மாதத்துக்கு ரூ.800, குழந்தைகள் கல்விக்கு மாதம் ரூ.100, மருத்துவ ஈட்டுப் படி மாதத்துக்கு ரூ.1250 ஆகியவற்றில் உயர்வு கிடைக்கலாம்.
* நேரடி வரிகளில் சில சலுகைகள் கிடைக்கலாம்; அப்போது மறைமுக வரிகளில் மாற்றம் இருக்கலாம்.
* சேவை வரி 12ல் இருந்து 14 சதவீதமாக உயர வாய்ப்பு உண்டு. அப்படி உயர்த்தப்பட்டால் போன் அழைப்புகளும் செலவு அதிகரிக்கலாம். ஓட்டல்களில் சாப்பாடும் விலை அதிகமாகலாம். ஜிம், கிளப்களில் சேருவதற்கு கட்டணம் உயரலாம்.
நாடு முழுவதுக்கும் ஒரே சீரான வரியைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) நடைமுறைபடுத்துவது குறித்த அறிவிப்பையும் ஜெட்லி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
67வது மத்திய பட்ஜெட்:
* இதுவரை நாட்டில் 66 முறை பட்ஜெட்களும், 12 முறை இடைக்கால பட்ஜெட்களும், 4 முறை சிறப்பு பட்ஜெட்களும் (மினி பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜெட்லி தாக்கல் செய்வது 67 வது முழு பட்ஜெட்.
* முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே. சண்முகம் 1947 நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்தார்.
* மிகவும் அதிகபட்சமாக மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
* ப. சிதம்பரம் 8 முறையும், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, ஒய்.பி. சவான், சி.டி. தேஷ்முக் ஆகியோர் 7 முறையும், மன்மோகன் சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி தலா 6 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
This news source Dinakaran tamil news paper