மக்கள் நல பணியாளர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.திமுக
ஆட்சியின்போது, 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை
எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். இதை நீதிபதி சுகுணா விசாரித்து, 13 ஆயிரம் பேருக்கும் மீண்டும்
வேலை வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தேவையில்லை என்று கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து, மக்கள் நல பணியாளர்கள் சங்க தலைவர் மதிவாணன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
திமுக
ஆட்சியின்போது, 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை
எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். இதை நீதிபதி சுகுணா விசாரித்து, 13 ஆயிரம் பேருக்கும் மீண்டும்
வேலை வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மக்கள் நல
பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தேவையில்லை என்று கூறி, தனி நீதிபதி
உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து, மக்கள் நல பணியாளர்கள் சங்க தலைவர்
மதிவாணன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். மீண்டும் சென்னை உயர்
நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன்
ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அளித்த தீர்ப்பில், மக்கள் நல
பணியாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டனர்.
இந்த
தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தது. தமிழக அரசு மனுவில், �மக்கள் நலப் பணியாளர்கள் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க இயலாது.
இது அரசின் கொள்கை முடிவு. இவர்களுக்கு பணி வழங்கினால் அரசுக்கு நிதிச்சுமை
அதிகரிக்கும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்� என
கூறப்பட்டிருந்தது.
மனு உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் அனில் தவே, லலித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் மூத்த
வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, �மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக
அலைக்கழிக்கப்படுகிறார்கள். அதனால்தான் 2008ல் தமிழக அரசு அவர்களை அரசுப்
பணிக்கு ஏற்று அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு
பணியும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் களின் பணி ரத்து செய்யப்பட்டது.
இதனால், பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால்தான் அவர்களுக்கு மது
ஒழிப்பு பிரசாரம் போன்ற வேறு பணிகளையாவது வழங்க உயர் நீதிமன்றம் அரசுக்கு
உத்தரவிட்டது� என்று வாதிட்டார்.
இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி
வாதிட்டார். இருதரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள்
நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற
உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில்,
இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, அமித் தவராஜ் (நேற்று புதிதாக உச்ச
நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர்) ஆகியோர் முன்னிலையில் நேற்று
விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி
ஆஜரானார். �தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்க முடியாது; பணி வழங்கினால்
அரசுக்கு வீண் செலவு ஏற்படும்� என்று வாதிட்டார்.