
தற்போது உள்ள காலகட்டத்தில் பிசிஓஎஸ் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றனர். பத்தில் ஒரு பெண்ணுக்காவது பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைகள் இருந்தும் அலட்சியமாக இருந்தால் புற்றுநோய் வரை கொண்டுசெல்லும். பிசிஓஎஸ் பிரச்சனை வராமல் இருக்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பிசிஓஎஸ்
பிசிஓஎஸ் பிரச்சனை என்பது பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை. ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, உடல் பருமன் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், மனசோர்வு, புற்றுநோய் என பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். எனவே தான் பிசிஓஎஸ் பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே சில உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

- சர்க்கரையை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி, வெள்ளம், தேன் மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
- துரித உணவுகளை சாப்பிடவே கூடாது. ஏனெனில் அதில் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.
- இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து பிசிஓஎஸ் பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்.
- ஆட்டு இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த இறைச்சியை சாப்பிடுவதால் உடலில் டெஸ்டோஸ்ட்ரானை அதிகரிக்கும்.

- உணவில் முடிந்த வரை நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இன் அளவு சமமாக இருக்க வேண்டும்.
- சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், அரிசி எண்ணையில் ஒமேகா 6 அதிகம் உள்ளது. எனவே தான் அந்த எண்ணெய்களை தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
- பால் பொருட்களை தவிர்த்து அதற்கு பதிலாக பாதாம் பால், தேங்காய் பால் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
- மைதா பொருட்களால் செய்யும் உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மைதாவில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே மைதாவில் செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும். மேலே கூறப்பட்டிருக்கும் உணவு பொருட்கள் நமக்கு பிசிஓஎஸ் பிரச்னையை தீவிரமடையாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Source : Dailytamilnadu.com